Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் ஒரு அரசியல் தலைவரை இழந்துள்ளது இந்தியா.! அடல் பிஹாரி வாஜ்பாய் சற்றுமுன் காலமானார்.!
அடல் பிஹாரி வாஜ்பாய் சற்றுமுன் காலமானார்.!
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜக-வின் பழம்பெரும் தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் காலமானார், இவருக்கு தற்பொழுது 94 வயது ஆகும், இவர் இந்தியாவில் 3 முறை பிரதமராக ஆட்சி பொறுப்பில் இருந்து இந்தியாவுக்கு பல நன்மைகளை செய்துள்ளார்.

vajpayee
அடல் பிஹாரி வாஜ்பாய் நீண்ட காலமாக உடல்நலகுறைவால் பாதிக்பட்டிருந்தார், இதனால் நீண்டகாலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார், இன்று அவர் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமையில் அவர் உயிர் பிரிந்தது.
1924 ம் ஆண்டு டிசம்பரில் 25 ம் தேதி பிறந்த இவர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து இந்திய சுதந்திரபோராட்டதிர்க்காக ஈடுபட்டதற்காக 1942 ல் சிறையில் அடைக்கப்பட்டார், 9 முறை லோக்சபா, 2 முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்து காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருந்தார்.
மேலும் இந்தியாவில் 10 வது பிரதமராக 1996 ல் பதவி ஏற்றார் ஆனாலும் நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிருபிக்கமுடியாததால் பதவி விலகினார், மீண்டும் 1998 ல் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்ச்சியை பிடித்தார்.2004-ம் ஆண்டு பிரதமராக தனது 5 ஆண்டு கால பதவியை நிறைவு செய்த வாஜ்பாய், 2005-ம் ஆண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
நாட்டிலேயே மிகவும் உயரியதான பாரத ரத்னா விருது வாஜ்பாய்க்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.சமீபத்தில்தான் நாட்டின் பழம்பெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான கருணாநிதியை இந்த தேசம் இழந்தது. இப்போது இன்னொரு முக்கிய அரசியல் தலைவரான வாஜ்பாயை இந்த நாடு இழந்துள்ளது.
