Tamil Cinema News | சினிமா செய்திகள்
அய்யயோ ஒரே நேரத்தில் மூன்றா? அஞ்சலி என்ன செய்தார் தெரியுமா?

நடிகை அஞ்சலி ஒரே நேரத்தில் மூன்று பேய் படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். மாடலாக சினிமா துறைக்கு அறிமுகமானவர் அஞ்சலி. இவரது விளம்பரங்கள் மூலம் இரண்டு சின்ன பட்ஜெட் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து, 2007ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனந்தி என்ற வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல பிலிம்பேர் விருது பெற்றார். இப்படம் அஞ்சலிக்கு ஒரு பாதையை உருவாக்கி தந்தது.
2010 இல், அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். இந்த விருதுகளுக்குப் பிறகு சிறந்த இளம் நடிகையாக கோலிவுட்டில் ஒரு தனியிடத்தை தக்க வைத்து கொண்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட திரைப்பட துறையில் பல படங்களில் நடித்து வந்தார். அவரின் எல்லா பட கதாபாத்திரங்களுமே அவருக்கு கச்சிதமாக பொருந்துவதால் ரசிகர்களிடம் எப்போதுமே அஞ்சலிக்கு தனி இடம் தான். ஆனால், திடீரென அஞ்சலியை பல நாட்களாக சினிமாவில் காணவில்லை. ஒரு கட்டத்தில் பல சிக்கல்களில் சிக்கினார் அஞ்சலி. அதை தொடர்ந்து, பலூன் படத்தில் ஸ்லிம் பிட்டாக ரீ எண்ட்ரி கொடுத்தார். ரசிகர்களிடம் அவருக்கு கிடைத்த வரவேற்பு, தொடர்ந்து பல வாய்ப்புகளை மீண்டும் அவர் கதவை தட்ட தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில், அறிமுக இயக்குநர் பிரிவீன் பிக்காட் இயக்கத்தில் ஓ படத்தில் நடிக்க இருக்கிறார். இது மட்டுமல்லாது, `லிசா’ என்ற படத்திலும், தெலுங்கில் அஞ்சலி இரு வேடங்களில் நடித்து பெரிய வெற்றி பெற்ற கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இம்மூன்று படங்களுமே பேய் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, அஞ்சலி கோலிவுட் ஸ்டார் ஐகான்களுடன் ஜோடி போடவும் இருக்கிறார்.
