Connect with us
Cinemapettai

Cinemapettai

அஸ்வினை அலாக்காக தூக்க ஸ்கெட்ச் போடும் டெல்லி, ஹைதராபாத்: அதிரடி ஐபிஎல் 2020

ashwin-cricket-life

Sports | விளையாட்டு

அஸ்வினை அலாக்காக தூக்க ஸ்கெட்ச் போடும் டெல்லி, ஹைதராபாத்: அதிரடி ஐபிஎல் 2020

கடந்த இரண்டு சீசன்களில் அஸ்வின் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்தார் அணியின் கேப்டனாகவும் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார் இருப்பினும் அந்த அணி முதல்கட்ட போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் இரண்டாவது சுற்று போட்டியின்போது சொதப்பலான ஆட்டத்தினால் ப்ளே ஆப் வாய்ப்பை தக்க வைக்க முடியவில்லை. இதனால் அஸ்வினை கழட்டிவிட அந்நிறுவனம் முடிவுசெய்து அவருக்கான தொகையை நிர்ணயித்தது.

அஸ்வினின் திறமை அறியாமல் அவசரப்பட்டு அவரை விடுவித்ததின் விளைவு, அவரை இடத்தில் எடுப்பதற்காக டெல்லி அணியும் ஹைதராபாத் அணியும் கடும் போட்டியில் இருந்தன. கடைசியில் டெல்லி அணி, அஸ்வினை 7.60 கோடிக்கு ஏலம் எடுத்தது.

பர்ஃபாமென்ஸ் சரியாக இல்லாமல் இருந்த இந்த வீரருக்கு இன்னும் இவ்வளவு மவுசு என்று பஞ்சாப் அணி வாயடைத்து நின்றது. பஞ்சாப் அணி அடுத்த ஐபிஎல்லில் புதிய கேப்டன் மற்றும் புதிய அணியுடன் விளையாட விரும்புவதாக முடிவு எடுத்துள்ளனர்.

டெல்லி தரப்பில் கூறியதாவது,”அஸ்வினியின் திறமை மற்றும் அனுபவம் எங்களுடைய இளம் அணிக்கு ஒரு வரப்பிரசாதம். மேலும் எங்கள் அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் நிறைய இடம்பெற்றுள்ளனர். அவர்கள் அஸ்வினிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்வார்கள்”என்று விளக்கம் அளித்துள்ளனர்.

இருப்பினும் அஸ்வினை ஏலத்தில் எடுத்ததை அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. எனினும் ஐபிஎல் சமயத்தில் கூறிவிடுவார்கள் என்று நம்பலாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top