Connect with us

Cinemapettai

உதவி இயக்குனர்களிடம் மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன்.. அசுரன் வெற்றிக்கு தமிழர்களின் ஒற்றுமை காரணம்

vetri

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உதவி இயக்குனர்களிடம் மன்னிப்பு கேட்ட வெற்றிமாறன்.. அசுரன் வெற்றிக்கு தமிழர்களின் ஒற்றுமை காரணம்

அசுரன் படத்தின் 100வது நாள் பட விழாவில் பேசிய வெற்றிமாறன், தமிழ் மக்களின் ஒற்றுமையால் தான் இந்த படத்தின் வெற்றின் சாத்தியம் ஆனது. அசுரன் படம் காமெர்சியலாக வென்றதுக்கு தமிழ் மக்களின ஒற்றுமையே காரணம்.

கமர்சியல் வெற்றியை நாம் நிகழ்த்த முடியாது. படம் வெளியடும் தேதி, மீடியாக்கள் உள்பட பல காரணம் இருக்கிறது. கமர்சியல் வெற்றி அதுவாகவே தான் நிகழும்.

என்னை யாருமே அழுத்தம் கொடுத்து எனக்கு விருப்பபம் இல்லாத விஷயத்தை செய்ய வைக்க முடியாது. எனக்கு உடன்பட்டு நான் சரி என்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே செய்வேன். படத்தை கொண்டாடிய மீடியாக்களுக்கு நன்றி.

எனக்கு மிகவும் கோபம் வரும், அதை என் உதவியாளர்களிடமே காண்பித்து இருக்கிறேன். அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். என் கோபத்திற்கு அவர்கள் காரணம் அல்ல. என்னுடைய இயலாமை, இதை நான் அவர்களிடமே சொல்லி இருக்கிறேன். அவர்களுக்கு நன்றி.

தனுஷ் சாருக்கு மிகவும் நன்றி, அவருடன் நான் ‘அது ஒரு கனா காலம்’ படம் முதல் பணியாற்றி வருகிறேன். தனுஷ் சார் அசுரன் படத்திற்கு கொடுத்த உழைப்பு அபாரமானது. எமோசனலாக அவர் நடித்தது நிச்சயம் கடினமானது. அதை சிறப்பாக நடித்து கொடுத்தார் இவ்வாறு கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top