Tamil Cinema News | சினிமா செய்திகள்
தெலுங்கு அசுரனில் நடிக்க விரும்பிய மகேஷ் பாபு.. அதற்கு முன்னாடியே துண்டு போட்ட பிரபல நடிகர்
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியாகி கதையாகவும் வசூல் ரீதியாகவும் உண்மையான வெற்றியை பெற்ற திரைப்படம் அசுரன். தனுஷின் அசுரத்தனமான நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் ஹிந்தி நடிகர்களையும் மிகவும் கவர்ந்தது.
மகேஷ் பாபு இந்த படத்தை தமிழில் பார்க்கும்போதே மிகவும் பிடித்துவிட்டது என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க விரும்பியதாகவும், ஆனால் சில படங்கள் கைவசம் இருப்பதால் கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டதாக கூறி வருத்தப்பட்டிருக்கிறார்.
ஆனால் தற்போது இந்தப் படத்தை முன்னணி நடிகரான வெங்கடேஷ் கைப்பற்றி தெலுங்கு வெர்ஷனில் நடிக்க இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் அல்லது கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளி வந்துள்ளன.
மேலும் இந்த படத்தின் ரீமேக் உரிமைகளை விற்றதிலும் செம லாபம் பார்த்திருக்கிறார் கலைப்புலி எஸ். தாணு என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம்.
