Tamil Cinema News | சினிமா செய்திகள்
அசுரன் தெலுங்கு ரீமேக் மஞ்சு வாரியர் ரோலில் நடிக்கப்போவது யார் தெரியுமா
Published on
அசுரன் படத்தில் தனுஷ் 50 வயது சிவசாமியாக மூன்று குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்திருப்பார். பிளாஷ் பேக்கில் சாராயம் காச்சும் வாலிபர் ரோலிலும் வளம் வருவார். வயதான தனுஷின் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிப்பில் அசத்தி இருப்பார்.
இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் வெங்கடேஷ் அவர்கள் வயதான தனுஷ் ரோலில் நடிக்கிறார். சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கம் இப்படத்தில் மஞ்சு வாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது அனுஷ்கா ஷெட்டி, ஸ்ரேயா சரண், மஞ்சு வாரியார் என பலரது பெயர்கள் கிசுகிசுக்கப்பது. ஆனால் தற்பொழுது ப்ரியாமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவரும் ஓகே சொல்லிவிட்டார் என்கின்றனர்.

priyamani 04
முத்தழகு இரண்டாம் ஆட்டத்திற்கு தயார் போல ..
