Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷின் அசுரன் படத்தை புகழ்ந்து தள்ளிய டோலிவுட் ஹீரோ, பாலிவுட் இயக்குனர்.. லேட் ஆனால் லேட்டஸ்ட் பாராட்டு
பூமணியின் வெக்கை நாவலின் தழுவல் தான் அசுரன். தனுஷ், வெற்றிமாறன், வேல்ராஜ், ஜி வி பிரகாஷ் கூட்டணியில் பிரம்மாண்ட அசுரனாகவே ரிலீஸாகி வெற்றி பெற்றுள்ளது படம். சாமானியன் ரசிகன் என்பதனை தவிர்த்து, கோலிவுட் பிரபலங்கள் பலரும் இப்படத்தை ரிலீசுக்கு பின் பாராட்டினார். படமும் 100 கோடி வசூல் கடந்து விட்டது.
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை பார்த்த பின் ட்விட்டரில் பாராட்டிய பிரபலங்கள்
டோலிவுட் சினிமாவின் பாஷா. நம் கோலிவுட்டிலும் ஸ்பைடர் வாயிலாக நேரடியாக தடம் பதித்தவர் மகேஷ் பாபு. இவர் அசுரன் நிதர்சனமான, தீர்க்கமான படம். சிறப்பான சினிமா. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என ஸ்டேட்டஸ் தட்டினார்.
Asuran…raw real and intense… Cinema at its best👌Congratulations @dhanushkraja @VetriMaaran @prakashraaj @gvprakash @theVcreations @VelrajR and entire team #Asuran
— Mahesh Babu (@urstrulyMahesh) October 20, 2019
பாலிவுட்டில் தனக்கென்ன தனி ஸ்டைல் உருவாக்கி சாதித்தவர் கரண் ஜோஹர். முன்பு போல அதிக படங்கள் இயங்குவதில்லை மனிதர். ஆனால் நல்ல சினிமாவை மிஸ் செய்யாத நபர் இவர். “என்ன மாதிரியான படம். நெற்றிப்பொட்டில் அடித்தது போல உள்ளது. வெற்றிமாறனின் அவர்களின் கதை சொல்லும் விதம் மற்றும் திறமையை கண்டு மெய்மறந்தேன். தனுஷ் அசைதலுக்கும் ஒரு படி மேல். தரமான நடிப்பு. புயலுக்கு முன் அமைதி; அதற்கு ஈடு இணையே இல்லை. கட்டாயம் பாருங்கள். சினிமாவின் வெற்றி.” என பதிவிட்டுள்ளார்.
What a film #Asuran is!!! Hits you hard and is riveting right through! Blown away by #VetriMaaran’s craft and story telling!!!! And @dhanushkraja is beyond amazing! Rock solid performance! His calm before the storm is unmatchable! Please watch it! Cinema victory!
— Karan Johar (@karanjohar) October 21, 2019
