Tamil Cinema News | சினிமா செய்திகள்
நேரம் பார்த்து திட்டம் தீட்டிய அசுரன்.. கலைப்புலி தாணு அள்ளிய வசூல் விவரம்
இன்றைய தமிழ் சினிமாவில் பழம் தின்று கொட்டை போட்டது யார் என்று கேட்டால் கலைப்புலி தாணுதான். தமிழ் சினிமாவை சுமார் 35 வருடங்களாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.
ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம், விக்ரம்பிரபு, அதர்வா, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரித்து விட்டார். இவர் படங்களில் ஒரு படத்தை எப்படி விளம்பரம் செய்ய வேண்டும் என்பதை இவர் மூலமா தான் தமிழ் சினிமா கற்றுக்கொண்டது.
தற்பொழுது தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள அசுரன் படம் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த படத்திற்கு கலைப்புலி தாணு விளம்பரமே செய்யவில்லை. அப்படியிருந்தும் அசுரன் படத்தை வெற்றி ஆக்கியது எப்படி? அங்கேதான் உள்ளது மிகப்பெரிய மூளை.
தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பதால் எந்த பெரிய படமும் ரிலீஸ் ஆவதில்லை. அதற்கு முந்தைய வாரத்தில் ரிலீஸ் செய்துவிட்டால் படம் எப்படியும் மூன்று வாரங்களுக்கு தியேட்டர்களை பிடித்துக்கொள்ளும். அசுரன் படத்தை திரையிட்ட முதல் நாள் முதல் காட்சிக்கு சிலரை வரவழைத்து படம் பார்க்க வைத்து, படம் பார்த்து வெளியே வரும்போது படம் சூப்பர், நடிப்பு சூப்பர், ஆஸ்கர் அவார்ட் தர வேண்டும், தேசிய விருது தர வேண்டும் என சமூக வளங்களை பார்த்து கோஷமிட வைக்க வேண்டும் என்பது நோக்கம். ஆனால் படம் அதற்கேற்றால் போல் அருமையாக இருந்தது.
மேலும் ஒரு சில சமூக வலைத்தளங்களையும் கைக்குள் போட்டு சமூக வலைத்தளங்களில் அசுரனுக்கு ஆதரவாக விளம்பரம் செய்துள்ளார் கலைபுலி தாணு. இதைப் பார்த்த சினிமா ரசிகர்கள் அசுரன் படத்திற்கு ஆதரவு தந்துள்ளனர். கலைப்புலி தாணுவுக்கு பல கோடிகள் கொடுத்துள்ளனர். எல்லாத்துக்கும் மேல் படமும் மொத்தமாக 100 கோடியை அள்ளி விட்டதாம். நேரம் பார்த்து திட்டம் தீட்டிய அருவா சும்மா இருக்குமா.?
