Connect with us
Cinemapettai

Cinemapettai

bigil-balaji

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிகில் படம் வெற்றியா? தோல்வியா?.. உண்மையை உடைத்த பிரபல ஜோதிடர் பாலாஜி

உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெறாது என்பதை கணித்ததன் மூலம் மிகவும் பிரபலமான ஜோதிடர் யார் என்றால் அது பாலாஜி ஹாசன். அரசியல் சார்ந்த விஷயங்களில் கூட இவர் சொன்ன அனைத்தும் நடந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

இத்தனை வருட மக்கள் வாழ்க்கையில் மாறாதது என்னவென்றால் அது ஜோசியம் பார்ப்பது தான். அதை வைத்துத்தான் நிறைய பேர் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பாலாஜி ஹாசன் பிகில் திரைப்படத்தை பற்றி கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது :

வருகின்ற வெள்ளிக்கிழமை வெளியாகும் பிகில் திரைப்படம் உலக அளவில் மாபெரும் வெற்றி பெறும் என கூறியுள்ளார். மேலும் படத்தில் பணியாற்றிய இசைக்கலைஞர்கள் முதல் தொழில் நுட்பக் கலைஞர்கள் வரை அனைவருக்கும் மதிப்பு கூடும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை விஜய், நயன்தாரா ஆகியோரது ஜாதகத்தை வைத்து கணித்து இருப்பதாக பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார்.

பிகில் திரைப்படம் தற்போது முன்பதிவில் இதுவரை இல்லாத அளவுக்கு இமாலய சாதனை படைத்து வருகிறது. மேலும் பிகில் படத்திற்கு சாதகமாக தீபாவளிக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top