செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

இதுவும் Divorce தான், குண்டை தூக்கி போட்ட ஜோதிடர்.. நாகார்ஜூனா குடுமபத்தை பத்தி பேச தில்லு வேணும்

பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த சோபிதா உடன் தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா திருமணம் முடிக்க உள்ளார். பிரபல நடிகை சோபிதா துலிபாலா உடன் நாக சைதன்யா டேட்டிங்கில் இருந்து வந்தார்.

சமீபத்தில் இரு வீட்டார்கள் முன்னிலையில் நாக சைதன்யாவும் சோபிதாவும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் டிசம்பர் 4-ஆம் தேதி நடக்கலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. நாக சைதன்யாவும், சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். ஆனால் இடையில் என்ன நடந்ததோ என தெரியவில்லை விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர்.

இதை தொடர்ந்து இருவரும் மூவ் ஆகிவிட்டார்கள் என்ற செய்தி வந்தாலும், அவ்வப்போது, சமந்தா மூவ்ஓன் ஆகவில்லை என்பதற்கு ஏற்ப சில நிகழ்வுகளும் நடந்தன. இந்த நிலையில், தற்போது, சோபிதா நாகசைதன்யா திருமணம் முடிக்கவிருக்கும் நிலையில், இதுவும் தேறாது என்று சொல்லி இருக்கிறார் ஒரு ஜோதிடர்.

இதுவும் விவாகரத்து தான்

இவர்களது திருமணம் குறித்து பிரபல ஜோதிடர் வேணு சுவாமி தனது கணிப்பை தெரிவித்தார். அதாவது இருவரும் 2027 இல் பரஸ்பரம் விலக வாய்ப்புள்ளதாக ஜோதிடர் வேணு சுவாமி கூறியிருந்தார். இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாகார்ஜூனா குடும்பத்தினருக்கு வேண்டப்பட்டவர் பலர் இதற்க்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ஜோதிடருக்கு தெலுங்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. மேலும் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதெல்லாம் அவருக்கு தேவையா.? மேலும் இதை கேட்ட ரசிகர்கள், “அதான் ஏற்கனவே தெரிஞ்ச விஷயம் தானே.. ” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், கண்டனங்கள் வலுக்க, நாக சைதன்யா – சோபிதா குறித்த வீடியோவை வேணு சுவாமி நீக்கியிருந்தார். இருப்பினும் வேணு சுவாமி கூறிய கருத்துக்கள் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

- Advertisement -

Trending News