உதவி இயக்குனராக இருந்து நடிகராக விஸ்வரூபம் எடுத்த 3 நடிகர்கள்.. இப்பவும் மார்க்கெட்ல டாப் தான்

திரையுலகில் சாதித்த பலரும் எடுத்த உடனே ஒரு மிகப்பெரிய நடிகராக வளர்ந்து விடுவதில்லை. ஆரம்பத்தில் சினிமா சம்பந்தப்பட்ட இதர பணிகளில் நுழைந்து அதன் மூலம் திரையுலகில் அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நுழைந்தவர்கள் தான் அதிகம். இப்படி ஏராளமான நடிகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளனர்.

அவர்களில் மிகவும் முக்கியமான மூன்று நடிகர்கள் குறித்து தான் தற்போது பார்க்க போகிறோம். பருத்திவீரன் படம் மூலம் அறிமுகமான முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் தான் நடிகர் கார்த்தி. இவர் ஹீரோ ஆவதற்கு முன்பு முன்னணி இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் கார்த்தி உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின்னர் தான் இயக்குனர் அமீர் கார்த்தியை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அடுத்தது நடிகர் ஜெயம் ரவி மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படம் மூலம் அறிமுகமானதால் இவர் ஜெயம் ரவி என அழைக்கப்படுகிறார்.

இவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஆளவந்தான் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இவர்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த வரிசையில் இடம் பிடித்துள்ளார். இதுவரை சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்து ஹீரோவாக வந்தார் என்று தான் நாம் நினைத்து கொண்டிருந்தோம்.

ஆனால் இவர் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளாராம். அதன்படி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான வேட்டை மன்னன் படத்தில் தான் சிவகார்த்திகேயன் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த படம் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹீரோவான பின்னர் சிவகார்த்திகேயன் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்