Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரிசார்ட்டில் என்ன வேலை? கொதித்த அரவிந்த்சாமி.! எனக்கு மிரட்டல் வந்தால் வரட்டும்
எம்.எல்.ஏ.க்கள் தாமாக ரிசார்ட்டில் தங்கியிருந்தால் வேலை பார்க்காமல் அங்கே என்ன செய்கிறீர்கள் என்று மக்கள் அவர்களை கேட்க வேண்டும் என்று நடிகர் அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களை பேருந்துகளில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய் கூவாத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைத்துள்ளனர். எம்.எல்.ஏ.க்களை யாரும் அடைத்து வைக்கவில்லை அவர்களாகவே இங்கு வந்து தங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து நடிகர் அரவிந்த் சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
If MLAs claim to be in the resort for the past 2 days of their free will, people should ask them why they are there & not working instead.
— arvind swami (@thearvindswami) February 11, 2017
எம்.எல்.ஏ.க்கள் கடந்த 2 நாட்களாக தாமாகவே ரிசார்ட்டில் தங்கியிருந்தால் வேலை பார்க்காமல் அங்கே என்ன செய்கிறீர்கள் என்று மக்கள் அவர்களை கேட்க வேண்டும்.
MLAs should get back to work, interact with the people in their constituency and decide whom to vote for.
— arvind swami (@thearvindswami) February 11, 2017
எம்.எல்.ஏ.க்கள் வேலைக்கு திரும்ப வேண்டும். தொகுதி மக்களுடன் கலந்து பேசி யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
If coercion and forced isolation is alleged, there is no point questioning the MLAs in the same resort about their free will.
— arvind swami (@thearvindswami) February 11, 2017
கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், தாமாகவா வந்தீர்கள் என்று ரிசார்ட்டில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களிடம் கேட்பதில் பலன் இல்லை என அரவிந்த் சாமி ட்வீட்டியுள்ளார்.
மேலும், இதுமாதிரி கருத்துகளால் மிரட்டல் வந்தால் என்ன செய்வீர்கள் என ரசிகர் கேட்ட கேள்விக்கு… சட்ட ரீதியாக சந்திப்பேன் எனவும் கூறினார். 46 வயது ஆகிறது மனதில் பட்டதை கூறும் நேரம் இது எனவும் கூறினார்.
தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழல் குறித்து அரவிந்த் சாமி அவ்வப்போது ட்வீட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி ஆட்சி அல்லது மறுதேர்தலே தற்போதைய நிலைக்கு சரியான தீர்வு என அவர் தெரிவித்துள்ளார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
