தெறி, பைரவா படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் தன்னுடைய 61வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தங்களது 100வது படமாக தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 1ம் தேதி சென்னையில் தொடங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வட இந்தியாவின் சில பகுதிகளிலும், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் அழகான இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால், சமந்தா மற்றும் ஜோதிகா ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கயிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஜோதிகாவிற்குப் பதிலாக அசின் விஜய் 61வது படத்தில் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக சிவகாசி, போக்கிரி மற்றும் காவல் ஆகிய படங்களில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தில் சத்யன், வடிவேலு, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ் ஆகிய பலரும் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ஜே.கே.விஷ்ணு ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பையும், முத்துராஜ் கலையையும், அனல் அரசு சண்டை பயிற்சியையும், விஜயேந்திரபிரசாத் திரைக்கதையையும் கவனிக்கயிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.