Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் தேவர்கொண்டாவுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது பட பூஜை போட்டோஸ்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
நம்ப சென்னை பொண்ணு. எத்திராஜ் கல்லூரியில் பி. காம் முடித்தவர். மானாட மயிலாட வாயிலாக கலைஞர் டிவியில் தடம் பதித்தவர். பின்னர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்றவர். கதாபாத்திரத்தை மட்டும் பார்த்து நடிக்கும் ஒரு நடிகை.

Vada-Chennai
விஜய் இயக்கத்தில் லக்ஷ்மி, கவுதம் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம், மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம், வெற்றிமாறனின் வடசென்னை என இவரின் சினிமா க்ராப் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் தான் தெலுங்கில் அறிமுகம் ஆவதாகவும், விஜய் தேவர்கொண்டாவின் புதிய படத்தில் நடிப்பதாகவும் தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டி விட்டு போட்டோ வெளியிட்டுள்ளார்.
So here s d pic wit @TheDeverakonda for my first telugu film pooja pic.twitter.com/EtaqIriqs5
— aishwarya rajessh (@aishu_dil) October 18, 2018
இன்னமும் பெயர் வைக்கப்படாத இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. ராசி கண்ணா மற்றும் அன்னாபெல் இருவரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

VD
விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
