Connect with us

Cinemapettai

முன்னால் ஆஸ்திரேலிய வீரரிடம் கிரிக்கெட் டிப்ஸ் கற்றுக்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் ! போட்டோ உள்ளே !

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முன்னால் ஆஸ்திரேலிய வீரரிடம் கிரிக்கெட் டிப்ஸ் கற்றுக்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் ! போட்டோ உள்ளே !

கனா

சத்தியராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் முக்கிய ரோல்களில் நடிக்கவுள்ள படம் கனா. நம் சிவகார்த்திகேயன் தான் தயாரிப்பாளர். இப்படத்தினை அருண் ராஜா காமராஜ் இயக்குகிறார். எடிட்டிங் ரூபன். கலை லால்குடி இளையராஜா. இசை திப்பு நின்னன் தாமஸ். மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படம் இது.

டேவ் வாட்மோர்

இலங்கையில் பிறந்தவர். இளம் வயதிலேயே ஆஸ்திரேலியா சென்று செட்டில் ஆகிவிட்டது இவர் குடும்பம். ஆஸ்திரேலிய டீமுக்காக 7 டெஸ்ட் மற்றும் 1 ஒரு நாள் போட்டியில் விளையாடியவர்.

மனிதர் வீரராக சாதித்ததை விட பறிச்சியாளராக மிகவும் பிரபலம். 96 இல் உலகக்கோப்பையை வென்ற இலங்கை அணியின் கோச் இவர் தான். மேலும் பங்களாதேஷ், ஜிம்பாவெ, பாகிஸ்தான் டீம்களுக்கு கோச்சாக இருந்தவர். ஐபில் இல் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். தற்பொழுது இந்தியாவில் கேரளா அணிக்கு பறிச்சி அளித்து வருகிறார்.

படத்தில் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக டாவ் வாட்மோர் அவர்களை அணுகியுள்ளது இந்த டீம். கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யாவுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுத்து வருகிறார்.

ஏற்கனவே மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில். இந்த தகவல் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top