Sports | விளையாட்டு
மைதானத்தில் ஆக்ரோஷமாக ஸ்டெப் போட்டபடி சைகை செய்யும் நடுவர். ரவுடி பேபி சாய் பல்லவி நடனம் சேர்த்தால் என ஆலோசனை சொல்லிய அஸ்வின்.

உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். வீட்டு வராண்டாவில் ஆரம்பித்து, சாலை, கிரௌண்ட், ஸ்டேடியம் என பலதரப்பட்ட இடங்களில் வெவ்வேறு பந்துகள், ரூல்ஸ் என்று பறந்து விரிந்துள்ளது இந்த விளையாட்டு.
பில்லி பௌடன்

billy-bowden
வீரர்களுக்கு தான் ரசிகர்கள் இருக்கவேண்டும் என்றில்லை, நடுவருக்கு கூட இருக்க வாய்ப்புள்ளது என்பதனை புரிய வைத்தவர் பில்லி. இவர் போர், சிக்ஸ் சைகை செய்வதில் ஸ்டைல் சாம்ராட்.
இந்நிலையில் சமீபத்தில் நம் உள்ளூர் லோக்கல் போட்டியின் வீடியோ சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனது. அதில் நடுவர் ஒருவர் மிக ஆக்ரோஷமாக சிக்ஸர், வயிட் எல்லாம் சமிக்ஞ்சை செய்துள்ளார்.
இந்த விடியோவிற்கு தான் அஸ்வின் பதில் தந்துள்ளார். ” இது போன்ற நபர்கள் கிரிக்கெட்டிற்கு தேவை தான், யோசியுங்கள் அப்படியே பேட்ஸ்மேனுக்கு அவுட் கொடுத்துவிட்டு டான்ஸ் ஆடிய படி அவரை மைதானத்தைவிட்டு வெளியேற வைத்தால். அதுவும் பின்னணியில் ரவுடி பேபி பாடல், சாய் பல்லவி ஸ்டைலில் நடனமைப்பு இருந்தால் எப்படி ? ” எனவும் குசும்பாய் கேட்டுள்ளார்.
