அஸ்வின் (மாறுபட்ட பௌலிங் ஆக்ஷன்) vs விஜய் (டான்ஸ், இடது கை பேட்டிங்) – ஜெயித்தது யார்?

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் …

ரவிச்சந்திரன் அஸ்வின் – திண்டுக்கல் ட்ரகன்ஸ் டீம் கேப்டன். பந்துவீசுவதோடு மட்டுமன்றி இம் முறை மனிதர் பேட்டிங்கிலும் மூன்றாம் இடத்தில இறங்கி அதிரடியாக ஆடி வருகிறார்.

முரளி விஜய் – ரூபி திருச்சி வாரியர்ஸ் சார்பில் துவக்க ஆட்டக்காரராக ஆடி வருகிறார். மனிதர் சிறப்பான பார்மில் உள்ளார். சத்தம் அடிக்கவில்லை என்றாலும் தனி ஆளாக பேட்டிங்கில் கலக்கி வருகிறார்.

இந்த இருவரும் ஒரே ஓவரில் நேருக்கு நேர் சந்தித்த பொழுது என்ன நடந்தது என்பதே இந்த வீடியோ.

வித்தியாசமான ஸ்டைலில் அஸ்வின் பந்துவீசிவது நமக்கொன்றும் புதிதல்ல. ஆனால் அதனை சமாளிக்க வலது டு இடது பேட்ஸ்மேனாக விஜய் மாறியது. நோ பால் ரன் எடுக்காமல் சிக்ஸ் அடித்தது என முழு சேட்டை தான் இவ்வீடியோ.

க்ளப் மேட்சில் இப்படி இரண்டு சர்வதேச வீரர்கள் வெவ்வேறு விதமாக முயற்சிப்பது கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானதா அல்லது விபரீதமா, என்ன என்று கமெண்டில் உங்கள் கருத்தை பதிவிடுங்க ..

Leave a Comment