Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

இதற்காகவே பிறந்தவரோ .. 21000 லைக்குள் பெற்று ட்ரெண்டிங் ஆகுது தோனி பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்ட ட்வீட்.

IND vs AUS

இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர். டெஸ்ட் தொடரை வென்றனர். அடுத்ததாக ஒரு நாள் போட்டிகள் ஆட ஆர்மபித்தனர்.

தல தோனி

ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில்  தோனியும் இணைந்தார். முதல் ஒரு நாள் போட்டியில் படு தோல்வி அடைந்தது இந்தியா. தோனியின் ஆட்டத்தை பற்றியும் பல விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் சேஸிங்கில் இந்திய வெற்றி பெற்றது. பழைய வின்டேஜ் தோனி கிடைத்து விட்டதாக அனைவரும் கொண்டாட ஆரம்பித்தனர்.

kedar_jadhav__dhoni

இந்நிலையில் இன்றும் சேசிங் தான். கோலி 46 ரன்களில் அவுட் ஆக, நிதானமாக தோனி மற்றும் ஜாதவ் ஆடி வெற்றியை பெற்று தந்தனர்.

தொடர்ச்சியாக மூன்று பெட்டிகளிலும் அரை சதம் கடந்த தோனி தொடர்நாயகன் விருதையும் பெற்றார். இந்நிலையில் அஸ்வின் போட்டி முடிந்த பின் ஸ்டேட்டஸ் தட்டியுளார் .. “மற்றுமொறு நாள், பைனல் போன்ற போட்டி, தோனி அசத்தலாக ரன் சேஸை முடித்தார், இதற்காகவே பிறந்தவரை போல. அசாத்தியமான அமைதி மாற்றும் தீர்க்கம் .” என பதிவிட்டுள்ளார்.

இந்த டீவீட்ஸ் லைக்ஸ், ரி ட்வீட் என ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top