fbpx
Connect with us

மான்கட் முறையில் ரன் அவுட் செய்ய முயன்ற அஸ்வின். டான்ஸ் ஆடி போக்கு காட்டிய தவான். வைரல் வீடியோ உள்ளே.

Sports | விளையாட்டு

மான்கட் முறையில் ரன் அவுட் செய்ய முயன்ற அஸ்வின். டான்ஸ் ஆடி போக்கு காட்டிய தவான். வைரல் வீடியோ உள்ளே.

ஐபில் 2019 இன் 4- காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை, மான்கட் முறையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் ரன் அவுட் செய்ததை யாருமே மறக்க முடியாது.

நேற்றயை ஐபில் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் கிறிஸ் கெயில் அதிரடியாக விளையாடினார். கெயில் 37 பந்தில் 69 ரன். மந்தீப் சிங் 30 ரன்கள். பஞ்சாப் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் ஷிகர் தவான் 56 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 58* ரன்களும் அடித்து கடைசி ஓவரில் டெல்லி அணியை ஐந்து விக்கெட் வித்யசத்தில் வெற்றி பெற செய்தனர்.

இந்நிலையில் இப்போட்டியில் தவான் அருமையாக ஆடிய சமயத்தில், நடந்த சுவாரஸ்ய சம்பவமே இப்பதிவு. பட்லர் அவர்களை அஸ்வின் அவுட் ஆகிய பொழுது, ஒரு வார்னிங் கொடுத்திருக்கலாம் என்பதே பலரின் கருத்தாக இருந்தது.

இம்முறை தவானுடன் அப்படி தான் செய்தார் முதலில். பின்னர் அடுத்த ஓவரில் அஸ்வின் ரன் அவுட் அடிக்க முயல, உஷாராக தன் க்ரெஸ் உள்ளே இருந்தார் ஷிகர் தவான். ஏமாற்றத்துடன் அஸ்வின் திரும்ப, குதித்து டான்ஸ் ஆடினார் தவான்.

வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் இந்த கூத்தை ரசித்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top