fbpx
Connect with us

Cinemapettai

ஐபில் 2018 பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் இவர் தான் ! குஷியில் சென்னைவாசிகள் !

kings-xi-punjab_Cinemapettai

News | செய்திகள்

ஐபில் 2018 பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் இவர் தான் ! குஷியில் சென்னைவாசிகள் !

இந்த வருடம் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாகத் தமிழக வீரர் அஷ்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.

R Ashwin

ஆரம்பம் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அஸ்வின், அந்த அணி தடை செய்யப்பட்டதும் புனே அணிக்கு ஒரு சீசன் விளையாடினார். பின்னர் காயம் காரணமாக இரண்டாவது சீசன் ஆடவில்லை. இந்தாண்டு புதிய ஏலம் அடிப்படையில் சென்னை அணி அவரை தக்கவைக்க வில்லை, மேலும் ஏலத்திலும்எடுக்கவில்லை. அவர் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ரவிசந்திரன் அஸ்வினை அந்த அணியின் ஆலோசகரான விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.

ashwin

பஞ்சாப் அணி இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னணி வீரர்களான யுவராஜ் சிங், கெயில் உள்ளிட்டோர் அணியில் உள்ளபோது அஷ்வினுக்கு கேப்டன் வாய்ப்பு கிடைத்துள்ளது. கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அவர் கூறுகையில், “இதைப் பெருமையாகக் கருதுகிறேன். ஒரு திறமையான அணியை வழிநடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அணியின் சிறந்த தோற்றத்தை வெளிப்படுத்த முயல்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top