ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்காத அஸ்வின், சென்னையில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

விரைவில் இங்கிலாந்தில் தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முழு உடல்தகுதியுடன் பங்கேற்க வேண்டும் என்பதற்காக நடந்துவரும் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி ஓய்வுபெற்று வருகிறார் இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்த காலகட்டத்தை குடும்பத்துடன் செலவிடும் அவர், ஜென் எக்ஸ்டி எனும் கிரிக்கெட் அகாடமியை தொடங்கி அதில் கிரிக்கெட் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இவரது தலைமையில் திறமை வாய்ந்த பல பயிற்சியாளர்கள் காலையும், மாலையும் மாணவர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து வருகின்றனர்.

இந்த கோடை விடுமுறையில் சம்மர் ஸ்லாம் எனும் பெயரில் பயிற்சி தொடங்கி வெற்றிகரமாக பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருக்கும்போது தினமும் அஸ்வினே நேரில் வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். தங்கள் கேரியரின் தொடக்கத்திலேயே ஒரு இன்டர்நேஷனல் வீரரின் பந்துவீச்சை எதிர்கொள்ளும் அதிர்ஷ்டம் தங்களுக்கு கிடைத்திருப்பதாக இங்கு பயிலும் மாணவர்கள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.