பர்மிங்ஹாம்: இந்திய அணியின் முன்னாள் அதிரடி மன்னன் சேவக், முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனை கூட்டத்தில் வைத்து மரண கலாய் கலாய்த்துள்ளார்.

இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் இந்தியா, பாகிஸ்தான் அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் போட்டிக்கு முன்பாகவே, முன்னாள் பாகிஸ்தான் வீரர் அக்தரை, சேவக் நேரலை நிகழ்ச்சியில் வைத்து அசிங்கப்படுத்தினார்.

இதுகுறித்து இந்திய வீரர் அஷ்வின் கூறுகையில்,’ சேவக், இன்று இப்படி மாறவில்லை. அவர் ஆரம்பம் முதலே அப்படி தான். இப்படி தான் கடந்த 2011ல் நடந்த உலகக்கோப்பை தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது, காலை 10 மணிக்கு பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் அவசர கூட்டத்துக்கு வரும்படி எல்லா வீரர்களிடம் தெரிவித்தார். அதற்கு சேவக், கிறிஸ்டனிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்றார்.

அதிகம் படித்தவை:  சுசி லீக்ஸ் பார்ட் 2 விரைவில், இருட்டில் எடுத்த திருட்டு போட்டோக்களை வெளியிடுவோம்!!! ஹேக்கர்ஸ் மிரட்டல்?????

அதற்கு கிறிஸ்டன் கூட்டத்தில் பேசிக்கொள்வோம் என அவர் தெரிவித்தார். கூட்டம் துவங்கியதும் சேவக்கிடம் கிறிஸ்டன் விஷயத்தை கேட்க, அனைவரும் போட்டிக்காக வியூகங்களைத்தான் சொல்லப்போகிறார் என அனைவரும் ஆர்வமாக் இருந்தோம். ஆனால் சேவக், போட்டிக்கு எல்லா வீரர்களுக்கும் 6 இலவச பாஸ்கள் கிடைக்கும் என தெரிவித்தனர். ஆனால் இதுவரை எங்கள் கைக்கு 3 பாஸ்கள் மட்டுமே கிடைக்கிறது. போட்டிக்கு முன் எங்களது பாஸ் கைக்கு வரவேண்டும். அப்படி வரவில்லை என்றால் நான் போட்டியில் கூட விளையாட மாட்டேன் என்றார்.

அதிகம் படித்தவை:  நடிகை சுஜாதாவின் திரையுலகப்பயணங்கள்

இதனால் கூட்டம் முழுதும் காமெடியானது. இதற்கு கிறிஸ்டன் என்னுடைய இரண்டு பாஸ்களை உனக்கே கொடுத்துவிடுகிறேன் என சொல்ல, அதற்கும் சேவக், உங்களது பாஸ் கோட்டா நாலு, ஆனால் உங்களுக்கும் இரண்டு தான் வழங்கப்படுகிறது. என்றார். அப்போது இருந்தே சேவக்கை பார்ப்பதால், தற்போது அவரது கருத்துக்கள் கம்மி தான் என்றார்.