Tamil Cinema News | சினிமா செய்திகள்
வீல் சாரில் டாப்ஸீ பண்ணு. வெளியானது மாயா பட இயக்குனரின் புது பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் .
அஸ்வின் சரவணன்
நயன்தாராவின் மாயா படம் வாயிலாக இயக்குனர் அவதாரம் எடுத்தவர். தமிழ், தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்தது இப்படம். இதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா- ஷிவேதா நடிப்பில் இறவாக்காலம் படத்தை இயக்கி முடித்து விட்டார். படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
Y Not Studios
விக்ரம் வேதா, தமிழ் படம் 2 தொடர்ந்து இவர்கள் தயாரிக்கும் படம். ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் உடன் கூட்டணி அமைத்த பின் ஆரம்பிக்கும் முதல் ப்ரொஜெக்ட் இது.
We are glad to share the First Looks of our maiden venture with our partners @RelianceEnt, a Tamil-Telugu bi-lingual starring @taapsee & directed by @Ashwin_saravana
Shoot starts tomorrow.@sash041075 @chakdyn @gopiprasannaa @onlynikil @venupro pic.twitter.com/84CLDd0AZJ
— Y Not Studios (@StudiosYNot) October 10, 2018
கேம் ஓவர்

Taapsee-Pannu
படத்தை இயக்குவது அஸ்வின் சரவணன். அவருடன் இணைந்து கதையா காவ்யா ராம்குமார் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு வசந்த். இசை ரான் யோஹன் இதன். காலை இயக்குனராக ஷிவா ஷங்கர், எடிட்டராக ரிச்சர்ட் கவின்.
தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் ரெடி ஆகும் இப்படத்தின் ஷூட்டிங் இன்று ஸ்டார்ட் ஆகி இருக்கும். ஹிந்தியில் பிங்க் படம் பார்த்து பிடித்துப்போக டாப்ஸீயை ஹீரோயினாக அணுகியுள்ளார் இயக்குனர். பிடித்துப்போக அவரும் ஓகே சொல்லிவிட்டார். ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் இது இல்லை, கதையின் மெயின் ரோலில் டாப்ஸீ நடிக்கிறார் என்றே இயக்குனர் சொல்லியுள்ளார்.

Game Over Tapsee Pannu
திரில்லர் ஜானரில் தான் இப்படமும். காலில் மாவுக்கட்டு போட்டுக்கொண்டு வீல் சாரில் அமர்ந்த படி டாப்ஸீயின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
