ashwin kholi

இந்திய அணிக்கு எதிரான இன்றைய லீக் போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்தில் கடந்த 1ம் தேதி துவங்கியது. இதில் எட்டு அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றன.

இதில் இன்றைய லீக் போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் பலப்பரீட்சை செய்கின்றன. இதில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டியிலும் இடம்பெற்றுள்ளனர். இலங்கை அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.