Sports | விளையாட்டு
யுவராஜ் பற்றிய கேள்வி ! கடுப்பாக பதில் சொல்லிய அஸ்வின் ! வீடியோ உள்ளே !
11-வது சீசன் ஐபில் போட்டிகள் துவங்கி வெற்றிகரமாக நடந்துவருகின்றது. இம்முறை பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் கூல் வெர்ஷன் 2.0 என்று சொல்லும் அளவுக்கு அசாத்தியமாக தனி அணியை வழிநடத்தியுள்ளார் அஸ்வின். டீம் செலக்ஷன், பௌலிங் சேஞ் என்று கலக்கி வருகிறார். புள்ளி பட்டயியலில் பஞ்சாப் அணி இரண்டாவது இடத்தில உள்ளது.
ஐதராபாத்தில் நடந்த 25-வது ஐபில் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை ஐதராபாத் அணி எதிர்க்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத், 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 132 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் 19.2 ஓவரில் 119 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. மேலும் இப்போட்டியில் நட்சத்திர ஆல் ரௌண்டார் யுவராஜ் சிங்குக்கு பதில் மனோஜ் திவாரியை களம் இறக்கியது பஞ்சாப் அணி நிர்வாகம்.
போட்டியின் தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களிடம் பேசினார் அஸ்வின். “நல்ல நிலையில் இருந்து வெற்றியை தவறவிட்டு விட்டோம். இதுபோன்று 20 ஓவர் போட்டியில் நடப்பது இயல்பான ஒன்றுதான். பீல்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் 20 ரன் வரை கூடுதலாக கொடுத்துவிட்டோம். கேட்ச்சுகளை தவறவிடுவதற்கு எந்த காரணங்களையும் சுட்டி காட்ட முடியாது” என்றார்.
ஈஸியாக ஜெயிக்க வேண்டிய மேட்சை தோற்ற வெறுப்பில் தான் அவர் காணப்பட்டார். அப்பொழுது நிருபர் ஒருவர் யுவராஜ் சிங் பற்றிய அப்டேட் என்ன என்று கேட்டார். உடனே கடுப்பான அஸ்வின் என்ன அப்டேட் என்று புரியாதது போல சீரியஸாக கேட்டார். அந்த நிருபரும் யுவராஜுக்கு ஏதும் காயமா என கேட்டார். உடனே அஸ்வின் ” நான் தான் தெளிவாக சொன்னேனே, அவருக்கு மாற்றாக மனோஜ் திவாரி இந்த போட்டியில் ஆடினார்.” என்றார்.
https://www.instagram.com/p/BiELcJMAxLr/?utm_source=ig_embed
இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது. சீனியர் வீரர்கள் ஐபில் போட்டிகளில் பார்ம் அவுட் ஆவது சகஜம் தான். அவர்களுக்கு அணி நிர்வாகம் ஒய்வு கொடுப்பதும் நடக்கும் ஒன்று தான். முன்பே அஸ்வின் தெளிவாக மனோஜ் திவாரி மாற்று வீரராக களம் இறங்கிவிட்டார் என்று சொல்லியும் தேவையில்லாமல் இது போன்று கேள்வி கேட்டதுக்கு பதிலடி கொடுத்துவிட்டார் அஸ்வின்.
சினிமாபேட்டை காமெண்ட்ஸ்
கெயில் , யுவராஜ் போன்ற மூத்த வீரர்களை வைத்து ஷேவாக்கின் துணை கொண்டு அழகாக செயல்பட்டு வரும் அஸ்வினை இது போன்று வெறுப்பேற்றும் கேள்வி கேட்பது நமக்கே கடுப்பாக தான் உள்ளது. நல்லா இருக்கிற டீமினுள் குழப்பத்தை எப்படியெல்லாம் உருவாக்குறாங்கப்பா நம்ம பயலுக !
