வெப் சீரிஸ்ஸில் நடிக்கும் குக் வித் கோமாளி அஸ்வின்.. அதிர்ஷ்டம் நாலாபக்கமும் கதவை தட்டுது!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் அஸ்வின் குமார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம்தான் பிரபலமானார். அதன் பிறகு இவருக்கு பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

முதன் முதலில் இவர் செல்லமே என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி உள்ளார். இந்த சீரியலில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு தாமரை, லட்சுமி கல்யாணம், தமிழ்ச்செல்வி மற்றும் நீலி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.

துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்யா வர்மா திரைப்படத்தில் அண்ணனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். அதன் பிறகு இவருக்கு தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. தற்போது முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

ashwin kumar
ashwin kumar

அஸ்வின் தற்போது என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். அஸ்வினுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் அடுத்தடுத்து இவருக்கு நிறைய படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் தற்போது நடிக்கும் படங்களின் கதைகளை கவனமாக தேர்வு செய்து வருகிறார்.

அஸ்வின் தெலுங்கு வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். அந்த வெப் சீரிஸ் 6 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இதில் சுனேனா,ஆதா சர்மா, ருஷானி ஷர்மா, சஞ்சிதா பூனாச்சா, அகன்ஷா சிங் மற்றும் வர்ஷா பொல்லாலமா போன்ற கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

இந்த வெப்சீரிஸ் பிரபல நடிகரான நானி தயாரித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த வெப் சீரிஸ் சத்யராஜ் மற்றும் ரோகிணி உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த வெப்சீரிஸ் 5 அந்தாலாஜி கதைகளை உள்ளடக்கி எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வெப்சீரிஸ் நடித்துள்ளது அஸ்வின் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்