ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

ஓவர் கெத்து காட்டி அலப்பறை செய்த டிவி பிரபலம்.. சர்வமும் அடங்கி போன சோகம்

சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் அதிக பிரபலமானவர் நடிகர் அஸ்வின் குமார். இதில் சிவாங்கி மற்றும் புகழுடன் அவர் செய்த சேட்டைகள் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

இதனால் அவர் செல்லும் இடமெல்லாம் அவருக்கு ரசிகர் பட்டாளம் தங்களுடைய அன்பை வாரி வழங்கினர். இந்த அன்பு அவரை வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமாகும் அளவுக்கு பிரபலப்படுத்தியது. இவர் ஏற்கனவே சினிமாவில் ஆதித்யா வர்மா, ஓ மனபெண்ணே உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறு கேரக்டரில் நடித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து அவர் ஹீரோவாக முக்கிய கேரக்டரில் நடித்த திரைப்படம் என்ன சொல்ல போகிறாய். அவர் ஹீரோவாக நடிக்கிறார் என்று சொன்னதுமே அவருடைய ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டமாக இருந்தனர். படம் எப்போது வெளியாகும் என்று அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் அவருக்கும் பட வாய்ப்புகள் ஏராளமாக குவியத் தொடங்கியது. இதனால் அஸ்வினுக்கு சற்று தலைக்கனம் கூடிவிட்டது. தனக்கென்று மேனேஜர், உதவியாளர் என்று நான்கைந்து பேரை வைத்துக்கொண்டு கெத்து காண்பிக்க ஆரம்பித்தார்.

ஆனால் அவருக்கு அந்த கெத்தெல்லாம் தற்போது மொத்தமும் அடங்கி போய் விட்டதாம். ஏனென்றால் அவர் மிகவும் எதிர்பார்ப்புடன் ஹீரோவாக நடித்த என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் தோல்வி அடைந்தது தான் முக்கிய காரணம். அதிலும் அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் ரொம்ப ஓவரா வாய் விட்டதும், அதனால்  கிளம்பிய எதிர்ப்பையும் பார்த்தே மனுஷன் ரொம்ப ஆடி போயிருக்கிறார்.

தன்னை தூக்கி வைத்து கொண்டாடிய ரசிகர்களே மீம்ஸ் போட்டு கலாய்க்கும் அளவுக்கு ஆகிவிட்டதே என்று அவர் ரொம்பவும் வருத்தத்தில் இருக்கிறாராம். இதனால் சிறிது காலத்திற்கு எங்கும் வாய் விடாமல் கொஞ்சம் அடக்கமாக இருக்க அஸ்வின் முடிவு செய்திருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News