புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

யோசிச்சு முடிவெடுத்த அசோக் செல்வன்.. முரட்டு தைரியத்தில் களம் இறங்கும் சூர்யா

Suriya: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களின் லிஸ்டில் இருப்பவர் தான் அசோக் செல்வன். கடந்த வருடம் இவருடைய நடிப்பில் வெளியான போர் தொழில் படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்திருக்கும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் அசோக் செல்வன் ரொம்பவும் நிதானமாக யோசித்து ஒரு முடிவை எடுத்து இருக்கிறார். அதாவது அசோக் செல்வன் நடிப்பில், இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கிய எமக்கு தொழில் ரொமான்ஸ் என்ற படம் உருவாகி இருக்கிறது.

இந்த பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாததால் தான் ஒரு முறை அசோக் செல்வன் பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தார். இந்த நிலையில் நவம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

யோசிச்சு முடிவெடுத்த அசோக் செல்வன்

காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள். ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பட குழு அறிவித்திருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்த பீனிக்ஸ் படமும் நவம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவில்லை. இதற்கு மற்றும் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுவது நாளை நவம்பர் 14 சூர்யா நடித்த கங்குவார் படம் ரிலீஸ் ஆவதால் தான்.

சூர்யா படத்துடன் மோத வேண்டாம் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. எப்படி பார்த்தாலும் அடுத்த நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகி சொன்ன தேதியில் கங்குவா படம் ரிலீஸ் ஆகும் என பட குழு உறுதியாக இருக்கிறது. மழையின் தாக்கம் இந்த படத்தின் வசூலை தாக்காமல் இருந்தால் சரி.

- Advertisement -

Trending News