Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிபிராஜ் ஸ்டைலில் நாயுடன் கூட்டணி வைக்கும் அசோக் செல்வன் . பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளே !
அசோக் செல்வன்
ஈரோட்டில் பிறந்து நம் சென்னையில் வளர்ந்தவர். லயோலாவில் விஸ் காம் படித்தவர். நீண்ட தேடலுக்கு பின் அமைந்தது இவரின் சினிமா என்ட்ரி . தன ரோல் மற்றும் கதையை தேர்ந்தெடுத்து நடிப்பவர். சாக்லேட் பாய் என்ற இமேஜில் சிக்கிவிடாமால் இருக்க மிகுந்த முயற்சி எடுப்பவர்.

ahokselvan_cinemapettai
கென்னேன்யா பிலிம்ஸ்
திருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து, புரூஸ்லீ, சர்வர் சுந்தரம், ஆகிய படங்களை தொடர்ந்து இவர்கள் தறிக்கும் படம் தான் “ஜாக்”. புரூஸ்லீ படத்தை இயக்கிய பிரஷாந்த் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்குகிறார். ராணுவ வீரன் மற்றும் அவனது மிலிட்டரி நாய் இருவருக்கும் உள்ள எமோஷனை இப்படத்தில் சொல்ல முயற்சி எடுக்கப்போகிறதாம் படக்குழு.
இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் துவங்கவுள்ளது. இந்த படத்திற்காக நடிகர் அசோக் செல்வன் தீவிர உடற் பயிற்சியினை மேற்கொண்டு வருகிறாராம். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாலராக பணியாற்ற படத்திற்கு கோகுல் பெனோய் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். திலீப் சுப்பராயன் இந்த படத்திற்கு சண்டை பயிற்சி அளிக்கிறார். விரைவில் ஹீரோயின், மற்ற நடிகர் , நடிகைகளின் தேர்வு முடிந்த பின் அந்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
