Sports | விளையாட்டு
இந்திய வீரர் முகத்தை பதம் பார்த்த பேட்ஸ் மேன் அடித்த பந்து

இந்திய கிரிக்கெட் அணியில் ஆடியுள்ள பெங்கால் அணி வீரர் அசோக் டிண்டா பயிற்சி ஆட்டத்தின் போது மோசமாக அடிபட்டு காயமடைந்துள்ளார், பேட்ஸ் மேன் அடித்த பந்து தான் மின்னல் வேகத்தில் தாக்கியது இது சக வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பெங்கால் அணி வீரர்கள் முஷ்டாக் அலி தொடரில் ஆட பயிற்சிப் போட்டியில் ஆடி வந்தார்கள் அந்த பயிற்சியில் அசோக் டிண்டா தான் பந்துவீசினார், அந்தப் பந்தை எதிர்கொண்டவர் விவேக் சிங் என்ற பேட்ஸ்மேன் அசோக் டிண்டா வீசிய பந்தை ஸ்ட்ரைடாக அடித்து ஆடினார்கள் விவேக் சிங்.
அந்த பந்து மின்னல் வேகத்தில் சென்று அசோக் டிண்டா முகத்தை பதம் பார்த்தது அதனால் அந்த இடத்திலேயே விழுந்தார் அசோக் டிண்டா இதனைக் கண்ட சக வீரர்கள் விரைந்தார்கள் மேலும் பிசியோதெரபிஸ்ட் விரைந்தார் பின்னர் அசோக் டிண்டா சமாளித்து அந்த ஓவரில் மீதி பந்துவீசினார் ஓவர் முடிந்ததும் மைதானத்தை விட்டு வெளியேறினார் மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேன் செய்துள்ளார்கள் அதன் பின்பு அவரை இரண்டு நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படி வலியுறுத்துகிறார்கள் மேலும் அசோக் டிண்டா வேறு எந்த காயமும் ஏற்படவில்லை இதனால் மற்ற ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்கள்.
அசோக் டிண்டாவுக்கு தற்பொழுது வயது 34 ஆகிறது பொதுவாக பேட்ஸ்மேனுக்கு தான் தற்பாதுகாப்பு குறைவு என கவலை பட்டு இருந்த இந்த நேரத்தில் தற்போது பலருக்கும் ஹெல்மெட் தற்பாதுகாப்பு கொண்டுதான் வீச வேண்டும் என தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
