Tamil Cinema News | சினிமா செய்திகள்
எந்த டிரஸ் எனக்கு நல்லா இருக்கு ? போட்டோவை வெளியிட்டு ரசிகர்களிடம் கேள்வி கேட்ட அஷ்னா சவேரி !

மும்பையை சேர்ந்தவர் , பாஷன் ஸ்டைலிஸ்ட் மற்றும் மாடெலிங்கில் இருந்தவர். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படி தான் என பேக் டு பேக் சந்தானம் படத்தில் நடித்தவர். அதன் பின் மீன்கொழம்பும் மண்பானையும், ப்ரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம் படங்களில் நடித்தார்.
கலையரசனுடன் ரொமான்டிக் காமெடி டைட்டானிக், விமலுடன் காமெடி படம் இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படங்களின் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க பெரும் பாடு பட்டு வருகிறார் அஷ்னா. இந்நிலையில் இவர் ஜீன்ஸ் , டாப்ஸ் மற்றும் பாவாடை தாவணியில் உள்ள இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு , எது தனக்கு நன்றாக பொருந்துகிறது என்று கேட்டுள்ளார்.

Ashna Zaveri
நம் நெட்டிசன்களும் போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விட்டுக்கொண்டு, இவரை ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.
சினிமாபேட்டை காமெண்ட்ஸ்
நாலு படம் நடிச்சு கிடைக்காத பப்லிசிட்டி, இரண்டு போட்டோவில் கிடைச்சுடுச்சே !
