Sports | விளையாட்டு
ஐபிஎல் 2020 சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்த நெஹ்ரா! டீம்மில் கோலி பதிலாக யார் தெரியுமா
ஐபிஎல் 2020 கோலாகலமாக முடிந்து விட்டது. கொரானாவின் தொற்று காரணமாக இம்முறை போட்டிகளை துபாய், ஷார்ஜா மற்றும் அபு தாபிக்கு மாற்றினர். அங்கே சென்று உடன் சிஎஸ்கேவை சிலருக்கு வைரஸ் பரவ, போட்டிகள் பாதிக்குமா என எதிர்பார்த்த நேரத்தில் பிசிசிஐ அழகாக நடத்தி முடித்து விட்டனர். புதிய டீம் ஆக டெல்லி அல்லது பெங்களூரு கோப்பையை ஜெயிக்காதா என எதிர்பார்த்த நேரத்தில் மும்பை வழக்கம் போல கோப்பையை தட்டி சென்றது.
ஐபிஎல் முடிந்த பின் வீரர்கள் ஆஸ்திரேலிய சுற்று பயணம் புறப்பட்டு விட்டனர். யார் சூப்பர் ஆக விளையாடிய வீரர்கள், சொதப்பியது யார் என பல அலசல்கள் தினமும் நடந்த வண்ணமே உள்ளது.
அந்த லிஸ்டில் இணைந்துள்ளார் ஆசிஷ் நெஹ்ரா. இவர் ஐபிஎல் 2020ன் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார். அதற்கான காரணத்தையும் சொல்லியுள்ளார்.

ipl-match
கேஎல் ராகுல் மற்றும் வார்னர் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக எடுத்துள்ளார். தவானுக்கு இவரது டீம்மில் இடம் இல்லை. இந்த டூரில் கோலி மூன்றாம் இடத்தில ரன்கள் எடுத்தாலும், சூர்யா குமார் யாதவ் எடுத்த ரன்கள் டீமுக்கு பெரிய மாற்றத்தை தந்ததன் காரணத்தால் சூர்யாவை எடுத்துள்ளார். டிவில்லேர்ஸ் இல்லாமல் டி 20 டீம்மா, அவர்க்கு நம்பர் நான்கு.
மிடில் ஆர்டரில் மும்பை இந்தியன்ஸ் இஷான் கிஷனை தேர்வு செய்துள்ளார், அவரே விக்கெட் கீப்பர், பேக் அப் டிவில்லேர்ஸ். அடுத்தது ஹர்டிக் பாண்டியா. வெளிநாட்டு வீரர்கள் ஆர்ச்சர் மற்றும் ரஷீத் கான் அடுத்தடுத்த இடத்தை பிடிக்கின்றனர். பின்னர் 9 , 10 இடத்தை பும்ரா மற்றும் சாஹல் பிடித்துள்ளனர். பிட்ச் மற்றும் டீமிற்கு ஏற்ப 11வது வீரராக சாமி அல்லது அஷ்வின் இருவரில் ஒருவரை ஆடவைப்பாராம்.
Ashish Nehra’s best IPL 2020 XI: KL Rahul, David Warner, Suryakumar Yadav, AB de Villiers, Ishan Kishan (wk), Hardik Pandya, Jofra Archer, Rashid Khan, Yuzvendra Chahal, Jasprit Bumrah, Ravichandran Ashwin/Mohammed Shami
ரபாடா, வில்லியம்சன், நடராஜன், சக்கரவர்த்தி, தவான், கோலி, ஐயர், தோனி, மனிஷ் பாண்டே போன்ற பலரை டீம்மில் சேர்க்கவில்லை நெஹ்ரா.
