இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி 20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் அனைவரும் ஆச்சிர்யப்படும் படி அணியில் சேர்க்கப்பட்டார் 38 வயதான ஆஷிஷ் நெஹ்ரா.

முதல் இரண்டு போட்டிகளிலும் புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது, அணியில் நெஹ்ராவுக்கு இடம் கிடைக்கவில்லை.

அணைத்து வித கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு:

இன்று மதியம் கேப்டன் விராட் கோஹ்லியிடம் பேசிவிட்டு, அணைத்து டீம் மெம்பர்களையும் வர வைத்து தான் ஒய்வு பெறுவதை கூறியுள்ளார். மேலும் தன் சொந்த மண்ணில், டெல்லியில் நடக்கும் போட்டியில் இறுதியாக விளையாடி விட்டு ஒய்வு பெற விரும்பும்  தன்னுடைய ஆசையையும் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுடனான டி 20 போட்டி முடிந்தவுடன், இந்தியா நியூஸிலாந்துடன் விளையாட உள்ளது. அதில் முதல் டி 20 போட்டி வரும் நவம்பர் 1 ஆம் தேதி டெல்லியில் உள்ள கோட்லா மைதானத்தில் நடக்க உள்ளது. அப்போட்டியுடன் தான் ஒய்வு பெற்றுக்கொள்வதாக நெஹ்ரா கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  கொல்கத்தாவை துரத்தி அடித்த மும்பை: பைனலுக்குள் நுழைந்த குஷியில் ரோகித்

18  வருடங்கள்:

18 வருடங்கலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுபவர். அடிக்கடி காயம் காரணமாக இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைக்காமல் போகி விடும். இதுவரை இவர்  உடலில் 12 சர்ஜெரிகள் செய்யப்பட்டுள்ளது. 1999ல் மொகமட் அசாருதீன் தலைமையில் இந்தியாவிற்க்காக விளையாட ஆரம்பித்தவர், 2017 ல்  விராட் கோஹ்லி தலைமையில் ஒய்வு பெறுகிறார். இவர் இந்தியாவிற்காக 17 டெஸ்ட்(44 விக்கெட்),120 ஒரு நாள் போட்டிகள்(157 விக்கெட்), 26 டி 20 போட்டிகள் (34 விக்கெட்) விளையாடி உள்ளார்.

இவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதும், பின்னர் சர்ஜெரி முடிந்து அணிக்கு திரும்புவதை பற்றி செய்தியாளர்கள் கேட்கும் பொழுதெல்லாம் “என் உடம்பில் இஞ்சூரி ஏற்படுவதில்லை, இஞ்சுரிகளுக்கு நடுவில் தான் என் உடம்பு மாட்டிக்கொண்டுள்ளது.” என்று நகைச்சுவையாக பதில் கூறுபவர்.

அதிகம் படித்தவை:  அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஐதராபாத் : அடிவாங்கி வெளியேறிய குஜராத்!

மறக்கமுடியாத போட்டிகள் இவை தான்:

இவர் கிரிக்கெட் வாழ்க்கையில் ரசிகர்கள் மறக்க முடியாத ஆட்டம் என்றால் 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்துடன் நடந்த போட்டி தான். உடல் நிலை சரியாக இல்லாத பொழுதும் டர்பன் நகரில் நடந்த போட்டியில் தன் 10 ஓவர்களில்  23 ரன்கள் கொடுத்து 6 விக்கட்டுகளை வீழ்த்தியது தான். இதுவே உலகக் கோப்பை போட்டியில் இந்திய பந்துவீச்சாளரின் சிறந்த ரெகார்ட் ஆகும்.

2011 உலகக் கோப்பையை  வென்ற இந்திய டீமில் இடம் பெற்றவர் .  அரை இறுதி போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்த முக்கிய காரணமும் இவரே. அப்போட்டியில் தன் விரலில் ஏற்பட்ட பிராக்ச்சர் காரணமாக பைனலில் விளையாட முடியாமல் போனது.

அடுத்து என்ன ?

ஓய்வுக்கு பின் ஐபில் டீம்களில் எதாவது ஒன்றிற்கு பௌலிங் கோச் ஆக செயல்பட நிறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.