Connect with us
Cinemapettai

Cinemapettai

ashish-nehra

Sports | விளையாட்டு

கால்கள் போனாலும் பரவாயில்லை களத்தில் போகட்டும்.. இங்கிலாந்தை புரட்டி எடுத்த ஆசீஷ் நேரா

ஆசீஷ் நேரா இந்திய அணிக்காக பல போட்டிகளில் வெற்றி பெற்று தந்துள்ளார். அவர் 1999 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், டெஸ்ட் போட்டிகளில் 5 வருடம், ஒருநாள் போட்டிகளில் 10 வருடம், டி20 போட்டிகளில் 8 வருடம் விளையாடியிருக்கிறார்.

2003 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு போட்டி நடைபெற்றது. இந்தியா முதலில் பேட் செய்து 250 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆசீஷ் நேரா பந்து வீசத் தொடங்கிய உடன் அடுத்தடுத்து இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்டைவீழ்த்தினார். 6 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்த போட்டிக்கு முன் ஆசீஷ் நேரா காலில் காயம் ஏற்பட்டு பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தார். ஷூ மற்றும் ஷாக்ஸ் அணிவதற்கு கூட அவரால் முடியவில்லை. இரவு முழுவதும் ஐஸ் கட்டிகளை காலில் கட்டி இருந்தார்.

அதனை தாண்டி அடுத்த நாள் வீங்கிய கால்களுடன் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி விளையாடி, இந்தியாவை வெற்றி பெற வைத்தார் ஆசிஸ் நெஹரா என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.

Continue Reading
To Top