Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆஷிப் அலியின் மகள் உயிரிழப்பு.! ரசிகர்கள் அதிர்ச்சி

ashibali

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆஷிப் அலியின் மகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இந்த செய்தி கிரிக்கெட் பிரபலங்களிடமும் ரசிகர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆஷிப் தற்பொழுது வயது 27 ஆகும் இவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட அணியில் இடம்பெறவில்லை. ஆனால் இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ளார்,  இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆசிப் அலி 54 ரன்கள் அடித்திருந்தார். ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் இரண்டு அரைசதங்கள் கடந்துள்ளார்.

இவரின் மகள் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டதால் இந்த செய்தி ஆஷிப் அலிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது இதனால் இவர் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார்.

இது குறித்து ட்விட்டரில் ஆஷிப் அலி கூறுகையில் என்னுடைய மகள் நான்காவது வகை புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார் அவர் அமெரிக்காவில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்து விட்டார், எனக்கு அமெரிக்கா செல்ல ஒரு மணி நேரத்தில் விசா கொடுத்ததற்கு அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு நன்றி தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்  அதுமட்டுமில்லாமல் என் இளவரசிக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என உருக்கமாக கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top