Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேராண்மைக்கு உதாரணம் அஜித் – போட்டோவுடன் ஸ்டேட்டஸ் பதிவிட்ட சாக்ஷி அகர்வால் !

சாக்ஷி அகர்வால்
பெயரை மட்டும் கேட்டால், அட போப்பா இன்னொரு வட நாட்டு நடிகையா என்று சொல்வீர்கள். ஆனால் போட்டோவை பார்த்தால் மிகவும் பரிச்சயமாக இருக்கும். சாக்ஷி இதுவரை கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். மாடலிங் துறையில் இருந்து சினிமா வந்தவர். பல ப்ராண்ட் விளம்பரங்களில் இன்றும் நடித்து வருகிறார். தமிழில் காலா இவருக்கு நல்ல பிரேக் த்ரூ வாக அமைந்தது.
அப்பா ராஜஸ்தான் , அம்மா தமிழ் நாடு. இவர் வளர்ந்து சென்னையில் தான். பி டெக் ஐ .டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கோல்ட் மெடல் எடுத்தவர். பெங்களூரில் MBA படித்தவர் , மேலும் நடிப்பிலும் கோர்ஸ் செய்துள்ளார்.
Viswasm
இந்நிலையில் விசுவாசம் படத்தில் இவரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தல அஜித்துடன் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார்.

Sakshi Agarwal – Thala Ajith
மேலும் “சிறந்த குணாதிசயம் மற்றும் பலருக்கு இன்ஸ்பிரஷன் ஆக இருக்கும் :அஜித் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது – இதனை என் வாழ் நாள் முழுக்க மறக்கமாட்டேன். பேராண்மையின் உதாரணம் அவர். ரசிகையின் மகிழ்ச்சி” என்று சொல்லியுள்ளார்.
