விஜய் படத்தில் ஒளிப்பதிவாளராக வேலை செய்த சிறுத்தை சிவா.. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

தல அஜித்துடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் பணியாற்றிய சிறுத்தை சிவா விஜய்யுடன் இணைந்து ஒரு படமாவது செய்ய மாட்டாரா என விஜய் ரசிகர்கள் ஆசையாக இருக்கின்றனர். ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் விஜய்யுடன் இணைந்து சிறுத்தை சிவா பணியாற்றியுள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் உள்ள கமர்ஷியல் இயக்குனர்களில் மிக முக்கியமானவராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. அதிலும் குறிப்பாக சிறுத்தை சிவா எடுக்கும் கிராம கமர்சியல் படங்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகின்றன.

மேலும் அஜித்துடன் இணைந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அனைத்து படங்களுமே தல அஜித் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்தது. அதிலும் கடைசியாக வெளியான விஸ்வாசம் திரைப்படம் அஜித்தின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக மாறியது.

அதனைத் தொடர்ந்து தற்போது ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து விக்ரம், சூர்யா, விஜய் என சிறுத்தை சிவாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் ரெடியாக இருக்கின்றன.

இப்படிப்பட்ட சிறுத்தை சிவா தன்னுடைய சினிமா கேரியரை ஒளிப்பதிவாளராக தான் ஆரம்பித்துள்ளார். தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் சிறந்த ஒளிப்பதிவாளராக வலம் வந்த சிறுத்தை சிவா தமிழில் விஜய் நடித்த பத்ரி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அந்த வரிசையில் சிறுத்தை சிவாவும் இடம் பெற்றுள்ளார். தமிழில் விஜய்யின் பத்ரி மட்டுமல்லாமல், பிரபு தேவா மற்றும் பிரபு நடித்த சார்லி சாப்ளின், மனதை திருடிவிட்டாய் போன்ற படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

vijay-siruthai-siva-cinemapettai-01
vijay-siruthai-siva-cinemapettai-01

Next Story

- Advertisement -