ஆர்யா

ஆர்யா சினிமாவில் நடிப்பு, தயாரிப்பு என பிஸியாக இருந்தாலும் கலர்ஸ் என்ற புதிய சானலில் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டுள்ளார். ஆர்யா பங்கேற்கும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி திங்கள் – வெள்ளி இரவு 8.30க்கு ஒளிபரப்பாகிறது. 16 பேர் தேர்வாகி அவர்களுக்குள் கடும் போட்டி நிலவி வருகின்றது.

சதிஷ்

karunakaran arya sathish

சதிஷ் இன்று ஹீரோக்களின் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க மோஸ்ட் வான்டேட் என்றால் இவர் தான். சில வருடங்களுக்கு முன் சந்தானம் செய்து வந்த நட்பு ரோலை இன்று கனக் கச்சிதமாக செய்பவர் இவர் தான். சதீஷ் ட்விட்டரில் ஆக்டிவாகவே இருப்பவர். படத்தில் உள்ள வசனங்களை போலவே இவர் ட்விட்டர் பதிவிலும் புதுமை , தனி ஸ்டைல் உண்டு.

இந்நிலையில் கடந்த மாதம் இவர் தன் ட்விட்டரில் இந்த போட்டோவுடன் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டார் .

enga veetu mapillai

“டார்லிங், நீங்க சும்மாவே இதை தான் செய்வீங்க, இப்போ இதை செய்ய காசு வேற கொடுக்குறாங்க. ஹ்ம்ம் .”

உடனே இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஆர்யா ” ப்ரோ, அடுத்த சீனுக்கு உங்க பெயரை பரிந்துரை செய்துள்ளேன். இப்பவே தயாராக ஆரம்பிங்க .”

உடனே சதீஷும், “அடுத்த சீசன் எப்போ ஆரம்பிக்கப்போகுது டார்லிங் ” என்று கிண்டலாக கேட்டுள்ளார்.

இந்நிலையில் வரலக்ஷ்மி சரத்குமார் , ” ஓ எவ்ளோ பேரை டா நீ ரெகமெண்ட் பண்ணுவே” என்று ஆர்யாவை கலாய்த்துள்ளார்.