Videos | வீடியோக்கள்
ஆர்யாவின் நடிப்பில் உருவாகும் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்.. இணையத்தில் மிரட்டும் டீசர்
முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம். கார்த்தியின் விருமன் படத்திற்கு பிறகு முத்தையா இந்த படத்தை இயக்கி வருகிறார். மேலும் ஆர்யாவுக்கு சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு பெரிய அளவில் எந்த படமும் வெற்றி கொடுக்கவில்லை.
முத்தையா, ஆர்யா கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. மேலும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த சித்தி இதானி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
Also Read : பத்து தல படத்தில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?. ஆடவிட்டு வேடிக்கை பார்த்த ஆர்யா
கடந்த அக்டோபர் மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்ட காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தின் படப்பிடிப்பு இப்போது மும்மரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மார்ச் 31ஆம் தேதியான இன்று இப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
எப்போதும் போல முத்தையாவின் இந்த படமும் கிராமத்து கதை அம்சத்தை கொண்ட படமாக தான் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் டீசரில் வெட்டு, குத்து என ரத்த வாடை அடிக்கிறது. மேலும் முறுக்கு மீசையுடன் ஆர்யாவின் கெட்டப் வேற லெவலில் உள்ளது. அதுமட்டுமின்றி பஞ்ச் டயலாக்கையும் அடித்து நொறுக்குகிறார்.
Also Read : மேட்ச் பாக்க ரெடியா? 2 வது ரவுண்டுக்கு தயாரான ஆர்யாவின் வைரல் போஸ்டர்
இப்போது ஆர்யாவின் ரசிகர்கள் காதார் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டீசரை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
Also Read : அரச்ச மாவையே அரச்ச கதையில் 5 நகைச்சுவை படங்கள்.. ஆர்யா, ஜீவாக்கு செட்டானது, கொஞ்சம் கூட செட்டாகாத விஷால்
