enga vettu mapillai feat sangeetha
கலர்ஸ் தமிழ்

ஆர்யா சினிமாவில் நடிப்பு, தயாரிப்பு என பிஸியாக இருந்தாலும் கலர்ஸ் என்ற புதிய சானலில் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டுள்ளார். இது அவருக்கு திருமணம் முடிக்க பெண் தேடும் படலம். ஆர்யா பங்கேற்ற ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி திங்கள் – வெள்ளி இரவு 8.30க்கு ஒளிபரப்பானது. 16 பேர் தேர்வாகி அவர்களுக்குள் கடும் போட்டி நடைபெற்றது. இந்நிலையில் கடைசி நாளன்று எந்தப் பெண்ணையும் தேர்ந்தெடுக்காமல் நழுவினார். இந்த செயலை பற்றி பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பினர்.

அதிகம் படித்தவை:  ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலினுடன் மோத தயாரான விமல் !
arya
arya

இந்நிலையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சங்கீதா சமீபத்தில் தன் பேட்டி ஒன்றில் ஆர்யாவின் இந்த முடிவு பற்றி பேசியுள்ளார். “ஒரு கல்யாண மேடைல எனக்கு இவரை பிடிக்கல, இவர் தான் பிடிச்சிருக்கு என்று முடிவெடுப்பது சரியா இருக்காது என்று அவர் நினைத்தார். அது ஏன் யாருக்கும் புரியவில்லை என்று தெரியல ? ஏமாத்திட்டாங்க ஏமாத்திட்டார் என பலர் சொல்றாங்க. அவர்களிடம் நான் கேட்டபோது அந்த பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து, ஒருவரை மனம் முடித்து , செட் ஆகாமல் ரெண்டு நபர்களும் பிரிஞ்சிருந்தா…? என்ன சொல்ல முடியும்.

அதிகம் படித்தவை:  படத்துக்காக அப்படியெல்லாம் முடியாது கீர்த்தி சுரேஷ் பளீர்.!
Sangeetha Arya

ஆர்யா கேமிரா முன்னால் பேசியிருக்காரே தவிர, அந்தப் பொண்ணுங்களோட ப்ரைவேட்டா பேசினதே கிடையாது. நான் அங்க இருந்ததால என்னால இதை உறுதியா சொல்ல முடியும். மக்களுக்கு இந்த முடிவு ஏமாற்றமாதான் இருந்திருக்கும். ஆனா, அது ரெண்டு நபர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது, குடும்பங்கள் சம்பந்தப்பட்டது. அதை மனசில் வெச்சு அவர் எடுத்த முடிவு எனக்கு தப்பாக தெரியவில்லை.” என்று கூறியுள்ளார் சங்கீதா.