Videos | வீடியோக்கள்
அர்னால்ட் போல பிரிடேடருடன் சண்டையிடும் ஆர்யா.. ஹாலிவுட் தரத்தில் வெளிவந்த கேப்டன் பட ட்ரெய்லர்

ஆர்யாவின் நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ள கேப்டன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமி, சிம்ரன் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஏற்கனவே ஆர்யா, சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணியில் டெடி திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் போதே படு மிரட்டலாக இருக்கிறது. ஹாலிவுட் தரத்தில் இருக்கும் இந்த படத்தில் டிரைலரை பார்க்கும்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Also read: கேப்டனாக அதிரடி ஆக்ஷனில் இறங்கிய ஆர்யா.. கொடூர மிருகத்துடன் வெளிவந்த போஸ்டர்
வெற்றிச்செல்வன் என்னும் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கும் ஆர்யா இதில் சவாலான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். ஒரு காட்டுக்குள் நடக்கும் மர்மங்களை கண்டறிய செல்லும் ஆர்யா அங்கு சந்திக்கும் வித்தியாசமான அனுபவங்கள் தான் இந்த கதை.
அந்த வகையில் ஹாலிவுட் பட பாணியில் ஏலியன்களை வைத்து ஒரு அதிரடியான கதையை இயக்குனர் கொடுத்திருக்கிறார். அந்த அளவுக்கு ட்ரைலரின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இமானின் பின்னணி இசையும், விஷுவல் காட்சிகளும் வியக்கும் வகையில் இருக்கிறது.
Also read: சார்பட்டா வெற்றியால் ஆர்யாவின் திடீர் முடிவு.. அதிர்ச்சியில் இயக்குனர்கள்
இதனால் இந்த ட்ரைலரை தற்போது ஆர்யாவின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த ட்ரெய்லரை பார்த்த பிரபலங்கள் பலரும் ஆர்யாவுக்கும், பட குழுவினருக்கும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read: சம்பளம் எல்லாம் ஏறிப்போச்சு, இப்போ வந்தா எப்படி.. வளர்துவிட்டவர்களுக்கு டிமிக்கி கொடுக்கும் ஆர்யா
