கரடுமுரடான உடற்கட்டுடன் பாக்ஸராக முரட்டுத்தனமாக இருக்கும் ஆர்யா.. பா ரஞ்சித்தின் அடுத்த பட பர்ஸ்ட் லுக்

பா ரஞ்சித் படங்களுக்கு எப்போதுமே சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

சமீபகாலமாக படம் இயக்குவதில் இருந்து சற்று ஒதுங்கி படம் தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்த பா ரஞ்சித் மீண்டும் இயக்குநராக களம் இறங்கியுள்ளார்.

இந்த முறை பா ரஞ்சித் நடிகர் ஆர்யா உடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்திற்காக ஆர்யா கடுமையான முறையில் உடற்பயிற்சி செய்து தனது உடலை மாற்றிய புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.

அதனைத் தொடர்ந்து பா ரஞ்சித் மற்றும் ஆர்யா இணையும் ஆர்யா30 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 11 மணிக்கு ஆர்யா30 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என பா ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அறிவிப்பு போஸ்டரில் கரடுமுரடாக முரட்டுத்தனமான உடம்புடன் இருக்கும் ஆர்யா புகைப்படம் வைரல் ஆகி விட்டது.

arya30-cinemapettai
arya30-cinemapettai