Tamil Cinema News | சினிமா செய்திகள்
60 வயது நடிகருக்கு ஜோடியாக ஆர்யா பொண்டாட்டி.. பணத்துக்காக பறக்கும் சாயிஷா
ஒரு வயதுக்குமேல் உள்ள நடிகர்கள் தங்களுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது நல்லது.
அதை விட்டுவிட்டு வயதான காலத்தில் காதல் ரொமான்ஸ் செய்வது சமீபகால ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறுவதில்லை.
மாறாக அநியாயத்துக்கு ரசிகர்களால் கிண்டல் செய்யப் படுகிறார்கள். அப்படி சமீபகாலமாக மீம்ஸ் கிரியேட்டர் களுக்கு தீனி போட்டு கொண்டிருப்பவர் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா.
60 வயதான பாலகிருஷ்ணா தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடிக்காமல் இன்னமும் ஹீரோயினை சுற்றி சுற்றி காதல் செய்வது போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிசா நடிக்க உள்ளாராம்.
சமீபகாலமாக பாலகிருஷ்ணாவின் படங்களில் நடிக்க வரும் நடிகைகளுக்கு பெரிய அளவு சம்பளம் கொடுத்து வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளாராம் அவர்.

sayyesha
