Tamil Cinema News | சினிமா செய்திகள்
கோலிவுட்டை காலி செய்யும் விஷால், ஆர்யா எப்படி?
விஷால் ஹீரோவாக நடிக்கும் இரும்புத்திரை படத்தில், தன் நண்பன் ஆர்யாவை வில்லனாக நடிக்க கூப்பிட்டபோது, நோ சொன்னார் ஆர்யா. அதன்பின், தெலுங்கில் ஏற்கனவே அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடித்த ஆர்யா, மம்மூட்டி, சினேகா நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கப்போகிறார்.
இந்த சூழலில், விஷால் வில்லனாக நடிக்கப்போகிறாராம். அதுவும், ஆர்யா நடிக்கப்போகும் மலையாள திரையுலகில் தான். இவர் இயக்குனர் உன்னி கிருஷ்ணன் இயக்க, மோகன்லால் நடிக்க உள்ள படத்தில் வில்லனாகிறார் விஷால்.
ஜல்லிக்கட்டு பத்தி கமெண்ட் பண்ணி தமிழனின் உணர்வுடன் விளையாடிய மலையாள ஆர்யாவும், தெலுங்கு விஷாலும் கொஞ்ச நாளைக்கு கோலிவுட் பக்கம் வராதீங்கப்பா’ என்று நெட்டிசன்கள் கமெண்ட் பறக்கிறது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
