Connect with us
Cinemapettai

Cinemapettai

bala-arya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

9 வருடங்களுக்கு பிறகு பாலா படத்தால் ஏற்பட்ட பிரச்சனை.. செம கடுப்பில் ஆர்யா!

ஒரு காலத்தில் பாலா என்ற இயக்குனரால் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தன்னுடைய இமேஜை உயர்த்திக் கொண்ட நடிகர்கள் தற்போது அவரது படங்களில் நடிக்க தயங்கி வருகின்றனர்.

அந்த வகையில் ஆர்யாவை சொல்லலாம். ஆர்யாவின் சினிமா கேரியரில் வெளிவந்த படங்களில் நான் கடவுள் மற்றும் அவன் இவன் போன்ற படங்களுக்கு எப்போதுமே சிறப்பு உண்டு.

இந்த இரண்டு படங்களையும் இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தவர் பாலா. அதுமட்டுமில்லாமல் இந்த இரண்டு படங்களும் ஆர்யாவின் சினிமா மார்க்கெட்டுக்கு பெரிதும் உதவின.

ஆனால் ஆர்யா இனிமேல் பாலா படங்களில் நடிக்கப்போவதில்லை என கடந்த சில வருடங்களாகவே முடிவெடுத்து விட்டாராம்.

அந்த வகையில் பாலா படத்தில் ஒன்பது வருடத்திற்கு முன்பு நடித்ததற்கு தற்போது வருத்தப்படுகிறாராம். பாலா இயக்கத்தில் விஷால் ஆர்யா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற திரைப்படம் அவன் இவன்.

இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தார் ஆக பிரபல நடிகர் நடித்திருப்பார். அவரை மரியாதை இல்லாமல் பேசும்படி பல வசனங்கள் அந்த படத்தில் இடம்பெற்றிருக்கும்.

இந்த வசனங்களை எல்லாம் பேசி நடித்தவர் ஆர்யா. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு தற்போது அந்த படத்தில் பேசியதற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் ஆர்யா அம்பாசமுத்திரம் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Continue Reading
To Top