Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரிஸ்க்! ரிஸ்க்! ரிஸ்க்! இதான் இப்ப ஆர்யாவோட ப்ளான்…
வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, யட்சன், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள் என வரிசையாக ஆர்யா நடித்த படங்கள் தோல்வியடைந்து வந்ததால், வழக்கமான காதல் காமெடி பேட்டனில் இருந்து விடுபட்டு தற்போது கடம்பன் படத்தில் பழங்குடி இனத்தவராக நடித்துள்ளார். இந்த படத்திற்காக தனது உடல் எடையை 90 கிலோவுக்கு மேல் அதிகப்படுத்தி நடித்தார். முக்கியமாக பாங்காங் நாட்டு யானைகளுடன் நடித்துள்ளார்.
அதையடுத்து அமீர் இயக்கத்தில் சந்தனத்தேவனில் நடிக்கிறார். இந்த படத்தில் மாடு பிடி வீரராக நடிக்கும் ஆர்யா, தற்போது தனது உடல் எடையை குறைத்து வருகிறார். அதோடு மாடு பிடி வீரராக நடிப்பதால், அதுகுறித்து ஓரளவு பயிற்சி எடுத்துக்கொண்டு களமிறங்குகிறாராம் ஆர்யா. இந்த படத்தில் நடித்து முடித்த தும், சுந்தர்.சியின் சங்கமித்ராவில் நடிக்கிறார். இதே படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்கும் ஜெயம்ரவியைப்போன்று ஆர்யாவும் ஹல்க் தோற்றத்திற்கு உடல்கட்டை மாற்றப்போகிறாராம்.
ஆக, கடம்பனுக்காக சில மாதங்கள் ரிஸ்க் எடுத்து உடல்கட்டை மாற்றிய ஆர்யா, இப்போது சந்தனத்தேவனுக்காக வெயிட் குறைக்கிறார். அடுத்தபடியாக சங்கமித்ராவுக்காக மீண்டும் வெயிட்டை போடுகிறார். அந்த வகையில், இந்த மூன்று படங்களுக்காகவும் ரொம்பவே மெனக்கெடும் ஆர்யா, இனிமேல் இதேபோன்று வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து ஒவ்வொரு படத்திற்காகவும் ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கிறாராம்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
