தொலைகாட்சியில் வெறும் செய்திகள், பாடல்கள், ஒரு அறையில் எடுக்கப்பட்ட நாடகங்கள், என குடும்பத்தோடு பார்த்து கொண்டு இருந்தனர். அதிலும் நம் பாலுமகேந்திரா “கதையின் நேரம்” என்று அழகான ஒரு வழ வழ கொழ கொழ என இழுக்காமல் அழகான சீரியல் குடுத்தார்.

ஆனால் இப்ப இருக்கும் சீரியல் பார்த்தால் சினிமாவும் தோற்று போகும், பிட்டு படமும் தோற்று போகும். அதிலும் நம் விஜய் டிவி சொல்லவே வேணாம். ஸ்டார் விஜய் ஆக மாறுனத்தில் இருந்து பிட்டுக்கு பஞ்சமே இல்லை.

சூப்பர் சிங்கர், பிக் பாஸ் என பெரிய கல்லாவை கட்டிய விஜய் டிவி அதை பார்த்து “கலர் டிவி” கல்லா கட்டுகிறது. இப்ப ஆர்யாவை வைத்து விளையாடுகிறது கலர் டிவி.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அகாதா, சுசானா மற்றும் சீதாலட்சுமி ஆகியோர் இறுதி சுற்றில் இருந்தனர். ஆனால் ஆர்யா யாரையுமே திருமணம் செய்துகொள்ளாமல் இழுத்து கொண்டே சென்றார்.

நிகழ்ச்சி முடிந்தபிறகு ஆர்யா சீதாலட்சுமிக்கு மட்டும் ஒரு கிப்ட் கொடுத்துள்ளார். இதுவரை எனக்கு டோக்கன் ஆஃப் லவ் ஆர்யா கொடுத்தது இல்லை என சீதாலட்சுமி தொடர்ந்து வருத்தப்பட்டு வந்ததால், இன்று ஆர்யா அவருக்கு அதை பரிசளித்துள்ளார். என கதை கதையாக விடுகிறார்கள் டிவியில். இதனை சீதாலட்சுமி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

நம்ம மக்களும் டைம் பாஸ் தானே என்று முக்கியமான நேரத்தை வீணடிக்காமல் வெட்டி நேரத்தில் பார்த்தால் சரி. இதெல்லாம் பெரிய சீரியஸ் ஆக எடுத்துக்காமல் பார்க்க கேட்டு கொள்கிறோம். இது எல்லாமே விளையாட்டு பண விளையாட்டு.