Tamil Cinema News | சினிமா செய்திகள்
டிக் டிக் டிக் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தின் வித்யாசமான டைட்டில் வெளியானது
நாணயம்,நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் போன்ற தரமான படங்களை இயக்கியவர் சக்தி சௌந்தர்ராஜன்.
சக்தி சௌந்தர்ராஜன் இன்றைய நெக்ஸ்ட் ஜென் இயக்குனர்களில் முக்கியமானவர். கோலிவுட்டில் மோஸ்ட் வான்டெட் மனிதர்.
கோவையை சேர்ந்த இவர் எடுத்தது என்னவோ நான்கு படங்கள் தான். ஆனால் அதில் அவர் காட்டிய வித்யாசங்கள், இவரை இன்று டாப் இயக்குனர்கள் லிஸ்டில் சேர்த்துள்ளது. பிரசன்னா, சிபிராஜ் நடிப்பில் பேங்க் திரில்லர் படமான ‘நாணயம்’, சிபிராஜ் போலீசாக நடித்த துப்பறியும் படம் ‘நாய்கள் ஜாக்கிரதை’, ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடித்த ஜாம்பீ படமான ‘மிருதன்’, அடுத்து ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் கூட்டணையில் தமிழ் சினிமாவின் முதல் விண்வெளிப்படமான் ‘டிக் டிக் டிக்’.
இவர் தான் ஆர்யாவுடன் இணைகிறார். இது என்ன ஜானாராக இருக்கும் என்பதே நெற்றில் இருந்து கோலிவுட் பட்சிகளின் ஹாட் டிஸ்கஷன். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இப்படத்தின் தலைப்பு டெடி (teddy) என்று போஸ்டரும் ரிலீஸ் செய்துள்ளனர். இப்படத்திற்கு இமான் இசை அமைக்கிறார்.
இயக்குனர் இம்முறை கரடியை ஏதும் இறக்குகிறாரோ ? சஸ்பென்ஸ் அதிகரித்து தான் உள்ளது, டைட்டில் வெளியான பின்.
