Connect with us

Cinemapettai

ஆர்யா பெரிதும் நம்பியிருந்த படம் நேரடி OTT ரிலீஸ்.. எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றிய படக்குழு

arya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆர்யா பெரிதும் நம்பியிருந்த படம் நேரடி OTT ரிலீஸ்.. எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றிய படக்குழு

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் நடிகராக வலம் வருபவர் ஆர்யா. ஆரம்பத்தில் சுமாரான படங்களை கொடுத்தாலும் இடையில் நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்கரன், மதராசபட்டினம் என பல வெரைட்டி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

நன்றாக வந்து கொண்டிருக்கிறார் என நினைத்த நேரத்தில் திடீரென கமர்ஷியல் நடிகராக ஆசைப்பட்டு மாஸ் படங்களில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டுக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டார்.

இடையில் சுதாரித்துக்கொண்ட ஆர்யா, இப்படியே போனால் வேலைக்கு ஆகாது என ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனருடன் கைகோர்க்க தொடங்கினார். அந்தவகையில் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் மகாமுனி.

ரசிகர்களிடையே நல்ல கருத்துகளை பெற்ற இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் டெடி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை குழந்தைகளை கவரும் விதமாக கரடி பொம்மையை வைத்து வித்தியாசமான திரில்லராக உருவாக்கியுள்ளனர்.

teddy-cinemapettai

teddy-cinemapettai

சக்தி சௌந்தர்ராஜன் ஏற்கனவே தமிழ் சினிமாவில் ஜெயம்ரவியை வைத்து மிருதன், டிக் டிக் டிக், போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். மேலும் நாணயம், நாய்கள் ஜாக்கிரதை என இவர் இதுவரை எடுத்த நான்கு படங்களுமே இதுவரை சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

இதனால் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டெடி படம் தற்போது நேரடியாக OTTயில் தளத்தில் ரிலீசாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. டெடி படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top