fbpx
Connect with us

Cinemapettai

பா.ரஞ்சித்துடன் கைகோர்க்கும் ஆர்யா.. தர லோக்கலாக தெறிக்கவிடும் அப்டேட்

arya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பா.ரஞ்சித்துடன் கைகோர்க்கும் ஆர்யா.. தர லோக்கலாக தெறிக்கவிடும் அப்டேட்

தமிழ் சினிமாவில் அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆர்யா. ஆரம்பத்தில் சுமாரான படங்களில் நடித்தாலும் பிறகு தன்னுடைய திறமையை புரிந்துகொண்டு சில நல்ல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் நடித்த பிறகு ஆர்யாவின் ரேஞ்சே வேற மாதிரி சென்று விட்டது என்றே சொல்லலாம். அப்படி ஒரு முரட்டுத்தனமான கதாபாத்திரம்.

அதன்பிறகு பெரிய நடிகராக வலம் வருவார் என எதிர்பார்த்தால் கதை தேர்வில் சொதப்பி தொடர்ந்து காதல் கதைகளில் நடித்து ரசிகர்களை சலிப்படைய வைத்தார்.

நீண்ட நாட்களாக வெற்றிக்கு போராடிக்கொண்டிருந்த அதற்கு கடந்த வருடம் வெளியான மகா முனி திரைப்படம் ஆர்யாவுக்கு நல்லதொரு பெயரைக் கொடுத்தது. தற்போது கதை தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார் ஆர்யா.

விரைவில் அவர் நடிப்பில் டெடி என்ற படம் வெளியாக உள்ளது. படம் ஹிட்டாகிறதோ இல்லையோ எப்போதுமே தன்னுடைய உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது கண்ணும் கருத்துமாக செயல்படுபவர் ஆர்யா.

ஆர்யாவின் அடுத்த படத்தின் அப்டேட் தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாகி வருகிறது. பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்க உள்ளார் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top